டெல்லியில் கனமழை.. விமான சேவைகள் பாதிப்பு

10906பார்த்தது
டெல்லியில் கனமழை.. விமான சேவைகள் பாதிப்பு
தலைநகர் டெல்லியில் இன்று (அக்.07) மாலை பெய்த கனமழையால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. டெல்லி வரவிருந்த 15 விமானங்கள் ஜெய்ப்பூர், லக்னோ, சண்டிகர் ஆகிய பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன. மேலும், டெல்லியில் இருந்து புறப்படும் விமானங்களும் கால தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். கனமழை காரணமாக சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி