தமிழகத்தில் வரும் 12ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம். தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 12 மாவட்டங்களிலும், நவ.13ம் தேதி 8 நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று (நவ.09) குமரி, தென்காசி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.