தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும்

1546பார்த்தது
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும்
வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூன் 12) காலை முதல் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி