சுதந்திர தினத்தையொட்டி பாம்பன் புதிய ரயில் பாலத்தில் பலத்த பாதுகாப்பு

77பார்த்தது
சுதந்திர தினத்தையொட்டி பாம்பன் புதிய ரயில் பாலத்தில் பலத்த பாதுகாப்பு
நாடுமுழுவதும் நாளை மறுநாள் (ஆக.15) சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மோப்ப நாய் உதவியுடன் பாலத்தின் தூண்கள் மற்றும் ரயில் தண்டவாள பகுதிகளில் போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மீனவர்கள் யாரும் பாலத்தில் அமர்ந்து மீன்பிடிக்க கூடாது என ரயில்வே போலீசார் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி