குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் கணேஷ் பரையா, பல தடைகளை தாண்டி மருத்துவ அதிகாரியாகி சாதித்துள்ளார். 2018-இல் நீட் தேர்வில் வெற்றி பெற்றும், உயரம் குறைவாக இருந்ததால் இவருக்கு மருத்துவம் படிக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் போராடி படிப்பை முடித்த இவர், தற்போது அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.