எத்தனாலில் இயங்கும் நாட்டின் முதல் பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வரும் ஜூன் 3-ம் தேதி அறிமுகம் செய்கிறது. சாதாரண பெட்ரோல் மற்றும் 85% எத்தனால் கலந்த E85 எரிபொருளில் இயங்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன பைக்கை, மத்திய சாலை
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.