கிருஷ்ணகிரி: ஒசூர் மகளிர் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் ஒடிசாவைச் சேர்ந்த இளம்பெண்ணின் ஆண் நண்பர் ரவி பிரதாப் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருந்து அவரை தனிப்படை போலீசார் டெல்லியில் வைத்து கைது செய்த நிலையில், ஓசூர் அழைத்து வந்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். கேமரா வைத்த நீலு குமாரி குப்தா (22), என்பவர் நேற்று முன்தினம் கைதான நிலையில், தற்போது அவரது நண்பரும் சிக்கியுள்ளார்.