இறைச்சி கடைகளில் ஆடு மாடுகளை வெட்டத் தடை: மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

49பார்த்தது
இறைச்சி கடைகளில் ஆடு மாடுகளை வெட்டத் தடை: மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
மிருக வதை தடுப்புச் சட்ட விதிகளை மீறி இறைச்சி கடைகளிலேயே ஆடு, மாடுகளை வெட்டத் தடை விதிக்க கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கால்நடைகளை வெட்டுவதற்கென தனி இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற விதி மீறப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, உரிய ஆதாரங்கள் இன்றி பொத்தாம்பொதுவாக குற்றம்சாட்டி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி