குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இருவரும் தினமும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த நிபந்தனை ஜாமின் உத்தரவை தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களிடம் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.