தேர்தல் வழக்கில் அமைச்சர் செங்கோட்டையனுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

10பார்த்தது
தேர்தல் வழக்கில் அமைச்சர் செங்கோட்டையனுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
தேர்தல் வழக்கில் பதிலளிக்குமாறு தவெக அமைச்சர் செங்கோட்டையனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி தவெக எம்எல்ஏ-வான செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வி.பி.பிரபு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி செங்கோட்டையனுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணை ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி