கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது: தனியார் பல்கலைக்கழகங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

0பார்த்தது
கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது: தனியார் பல்கலைக்கழகங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், லாபம் ஈட்டும் நிறுவனமாக கல்வியை கருதக்கூடாது என்றும் தமிழக அரசு, பல்கலைக்கழக மானிய குழு மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். மேலும், மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி