சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் 2-ம் பாகமான ‘கேரளா ஸ்டோரி 2’ டிரெய்லரை இணையதளங்களிலிருந்து நீக்க கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மதம் சார்ந்த மோதல்களை தூண்டும் வகையில் இந்த டிரெய்லர் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை போலவே 2-ம் பாகத்தின் டிரெய்லரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.