உயர் மின்னழுத்தம் காரணமாக டிவி, ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்ததால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட சுப்பிரமணிய நகரில் மழையால் ஏற்பட்ட உயர் மின்னழுத்தம் காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதமாகியுள்ளன. பாதுகாப்பு கருதி நேற்றிரவு அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், இதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.