காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில், பராமரிப்புப் பணி மின்தடை காரணமாக இன்று திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. காலையில்தான் வாட்ஸ்-அப் மூலம் பெற்றோருக்குத் தகவல் அனுப்பப்பட்டது. இதனால் விடுமுறை தெரியாமல் வெளியூர்களில் இருந்து வந்த 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். மின்தடைக்காகப் பள்ளிக்கு விடுமுறை அளிப்பது இதுவே முதல்முறை என மக்கள் கூறினர்.