சென்னையில் நாளை (நவ.8) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக கடந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை ஈடுசெய்ய நாளை பள்ளிகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், நாளை பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.