திருவாரூர் மாவட்டத்தில் நாளை (நவ.13) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை பெரிய கந்தூரி திருவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 14 நாட்கள் ஜாம்புவானோடை தர்கா பெரிய கந்தூரி விழா நடைபெறவிருக்கிறது. இந்த கந்தூரி திருவிழா வருடம் தோறும் இப்பகுதியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.