தருமபுரி மாவட்டத்தில் புதூர் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளதால், பாலக்கோடு வட்டத்திற்கு நாளை (பிப்., 25) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்ய மார்ச் 7ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. அதே போல் அய்யா வைகுண்டசாமியின் அவதார தினத்தையொட்டி, மார்ச் 4ஆம் தேதி தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படவுள்ளது.