தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவள்ளூரில் நாளை காலை மழைப்பொழிவை பொறுத்தே விடுமுறை அறிவிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.