ஹாலிவுட்டின் பிரபல நடிகர் டாம் க்ரூஸுக்கு கௌரவ ஆஸ்கார் விருது இன்று (நவ.17) வழங்கப்பட்டுள்ளது. இது அவருக்கு கிடைத்த முதல் ஆஸ்கார் விருது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட படத்தில் அவர் நடித்ததற்காக அல்லாமல், திரைப்படத் துறையில் அவர் படைத்த சாதனை மற்றும் ஆற்றிய சேவை ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.