ஹோண்டா நிறுவனம் தங்களது கார்களுக்கு ரூ.2 லட்சம் வரை அதிரடி சலுகை அறிவித்துள்ளது. ஹோண்டா சிட்டி, எலிவேட், அமேஸ் உள்ளிட்ட கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.97 லட்சம் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை பிப்ரவரி மாதத்தில் மட்டும் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசூகி, டாடா, ஹூண்டாய், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க ஹோண்டா இந்த சலுகையை வழங்கி வாடிக்கையாளர்களை கவர திட்டமிட்டுள்ளது.