சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பெரும் பொருட்செலவில் புதிதாக திறக்கப்பட்ட ஹாங்கி பாலம் நிலச்சரிவால் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. சிச்சுவான் மற்றும் திபெத் இடையேயான பயணத்திற்கு முக்கியமான இந்த பாலத்தில், ஏற்கனவே விரிசல்கள் கண்டறியப்பட்டதால் மூடப்பட்டது. அதிகாரிகள் சுதாரித்து கொண்டு முன்னரே மூடியதால், இந்த விபத்தில் எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.