அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த நிலையில், குதிரை பேரம் நடந்ததாக அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில், “எந்தவிதத்திலும் குதிரை பேரம் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அவரவர் கட்சிகளில் உள்ள நிலையையும், குழப்பத்தையும் பார்த்து ராஜினாமா செய்கிறார்கள். தலைமை சரியில்லாததால் அதிமுக MLA-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு வருகின்றனர்” என்றார்.