சென்னையில் சவாரிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு குதிரைக்கு கிளாண்டர்ஸ் நோய் தொற்றால் உயிரிழந்தது. இதனால், மெரினா, கோவளம், மாமல்லபுரம் கடற்கரைகளில் சவாரிக்கு பயன்படுத்தப்படும் 200க்கும் மேற்பட்ட குதிரைகளிடமிருந்தும், குதிரை பராமரிப்பாளர்களிடமிருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஹரியானாவில் உள்ள ICAR ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. மாநில அரசு, குதிரைகளுக்கான உரிமம், பதிவு, மருத்துவ பரிசோதனை, தடுப்பூசி பதிவுகள் போன்ற விதிகளை இனி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.