திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, இன்று (ஜூலை 8) பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. தவெக கட்சியை சேர்ந்த எம்எல்ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து தற்காத்து கொள்ள அசோக் குமார் நேற்று முன்ஜாமீன் மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.