தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், மேலும் இருவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கில் 3 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 2 பேருக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது. இதுவரை இந்த வழக்கில் மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.