குதிரை பேரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் மட்டுமே புலன் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து, அதுதொடர்பான மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.