காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் அருந்துவது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். இதை தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வந்தால் ரத்த ஓட்டம் சீரடைவதுடன் உடல் கொழுப்பும் கரைய தொடங்கும். இது ஜீரண மண்டலத்தை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், சருமத்திற்கு பொலிவையும் அளிக்கும். சுறுசுறுப்பான காலை பொழுதிற்கு டீ, காபிக்கு மாற்றாக வெந்நீரை பருக வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.