மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில், ஹோட்டல் உரிமையாளர் ஒருவர், ஊழியரை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சக ஊழியர்கள் முன்னிலையில், அந்நபரை நிர்வாணமாக்கிய உரிமையாளர் சரமாரியாக தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட ஊழியர் உயிர் பயத்தில் கதறி துடித்துள்ளார். ஆனால் அந்த கொடூரமான உரிமையாளர் கருணை காட்டவில்லை. இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.