சென்னையில் ஹோட்டல்கள் மூடல்.. 2,000 டன் காய்கறிகள் தேக்கம்
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் சில ஹோட்டல்கள் மூடல் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் 2,000 டன் காய்கறிகள் தேக்கமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘காய்கறிகளின் விலை குறைந்தாலும் வாங்குவதற்கு ஆளில்லை’ என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கெட்டுப்போன காய்கறிகளை வியாபாரிகள் சாலையோரம் கொட்டி வருவதாகவும் கூறுகின்றனர். காய்கறிகள் தேக்கம் காரணமாக பெரும் நஷ்டம் ஏற்படுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
நன்றி: குமுதம்
நன்றி: குமுதம்
