புதுக்கோட்டையில் வெளியூர் சென்ற தம்பதியினர் வீடு திரும்பியபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் வைத்திருந்த சுமார் 12 சவரன் தங்க நகைகள், ரூ.12 லட்சம் மதிப்பில் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது. இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மோப்ப நாய், தடய அறிவியல் நிபுணர்கள் மூலம் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.