ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. பாதுகாப்புப்படையினர் 30 பேர் பலி

3614பார்த்தது
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. பாதுகாப்புப்படையினர் 30 பேர் பலி
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அரசு படையைச் சேர்ந்த குறைந்தது 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மரிப் மற்றும் ஹத்ரமவுத் மாகாணங்களில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி