ஏமன் அருகே அரபிக்கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் இன்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஒரு சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கப்பலில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், மாலுமிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கையாக சரக்கு கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான கப்பல் எந்த நாட்டை சேர்ந்தது என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.