"இதற்கு மேல் ஒரு அரசாங்கம் எப்படி விரைவாக செயல்பட முடியும்..?" என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வியெழுப்பியுள்ளார். கோவை மாணவி பலாத்காரம், சட்டம் ஒழுங்கு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சென்னையில் இன்று பதிலளித்த அமைச்சர், தப்பியோட முயன்றவர்களை 48 மணி நேரத்திற்குள், 3 பேரை சுட்டுப்பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது இந்த ஆட்சி. 30 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்து உரிய தண்டனை பெற்றுத்தர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிற ஆட்சி இதுதான் என்று தெரிவித்தார்.