1957 சென்னை மாகாண தேர்தலில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் 151 இடங்களை வென்று அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைத்தது. ஆந்திரா பிரிந்ததால் பலவீனமடைந்த கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களை மட்டுமே பெற்றது. முதன்முறையாகக் களம் கண்ட திமுக, தனிச் சின்னம் இல்லாத நிலையிலும் அண்ணாதுரை, கருணாநிதி, அன்பழகன் உள்ளிட்ட 15 இடங்களை வென்று சாதனை படைத்தது. காமராஜர் சாத்தூரிலும், அண்ணாதுரை காஞ்சியிலும் வென்றனர்.