சென்னை பெரம்பூர் பின்னி மில் வளாகத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியிருந்த நிலையில், ஸ்டண்ட் காட்சிக்காக வெடிப்பு (Blast Scene) எடுக்கப்பட்டு வந்தது. இதற்காக சிலிண்டர் மூலம் பயர்பால் அமைப்பு தயார் செய்யப்பட்டிருந்தது. அப்போது திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டதால் பயர்பால் வெடித்து சிதறியது. இதில் அருகில் இருந்த மதன் என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.