சமூக ஊடகங்களில் AI மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை அடையாளம் காண, வீடியோக்களில் உள்ள முகபாவனைகள், lip syncing மற்றும் கண் அசைவுகளில் உள்ள சிறிய குறைபாடுகளைக் கவனிக்கலாம். மேலும், வீடியோவின் வெளிச்சம், நிழல் மற்றும் பின்னணியில் ஏற்படும் தவறுகள் மூலமும் அவற்றைக் கண்டறிய முடியும். Google Lens மற்றும் Invid போன்ற AI கண்டறிதல் கருவிகள் மூலமாகவும் இந்த வீடியோக்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கலாம்.