பயிர்களை பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாக்க முதலில் வயலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் கொடிகளை அகற்றுவது அவசியம். இயற்கை முறையாக வேப்பெண்ணெய், பசும்பால் கலவை, உயிரி பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஒரே பயிரை தொடர்ந்து செய்கை செய்யாமல் மாற்றுப் பயிரிடுதல் நல்லது. மண் ஆரோக்கியத்தை பராமரித்து, சரியான நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் செய்தால் செடிகள் வலுவாக வளரும்.