சென்னை கோயம்பேடு அருகே சாக்கடையில் மனித எலும்புகள் மற்றும் மண்டை ஓடு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்க்கெட் கழிப்பறை கழிவுகளில் கிடந்த எலும்புகள், மண்டை ஓட்டை தூய்மைப் பணியாளர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக அவர்கள் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மனித எலும்புகள் எப்படி வந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.