தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகள் தங்களது கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. மேலும், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகளை உறுதி செய்து வருகிறது. இந்நிலையில், வரும் தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என திமுக0வுக்கு மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. கடந்த முறை தாங்கள் விரும்பாத 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், அங்கு வெற்றி பெற்றதாக ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார்.