திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கோரும் மனிதநேய மக்கள் கட்சி

24பார்த்தது
திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கோரும் மனிதநேய மக்கள் கட்சி
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் மனிதநேய மக்கள் கட்சி இன்று (பிப்.23) முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மனிதநேய மக்கள் கட்சி 5 தொகுதிகளை கேட்டுள்ளதாக அதன் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த 2021 தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், கட்சியின் வளர்ச்சி மற்றும் தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு கூடுதல் தொகுதிகளை கோரியுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

தொடர்புடைய செய்தி