காலையில் எழுந்திருக்கும் போது மனம் அமைதியாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்க வேண்டியது அவசியம் என்பதால், தம்பதியினர் அதிகாலையிலேயே பண பற்றாக்குறை மற்றும் கடன்கள் பற்றிய விவாதங்களை தவிர்க்க வேண்டும். அதேபோல், பழைய கசப்பான சம்பவங்களையோ அல்லது குடும்ப பிரச்சினைகளையோ காலையிலேயே பேசி அன்றைய நாளை சண்டையுடன் தொடங்க கூடாது. அதிகாலையில் ஒருவரையொருவர் குறை கூறாமல், நேர்மறையான மற்றும் மகிழ்ச்சியான விஷயங்களை பேசுவது தம்பதியினரிடையே நாள் முழுவதும் நல்லிணக்கத்தை நீடிக்கச் செய்யும்.