குஜராத்தில் 4 மாத வாடகை பாக்கி கேட்டு அழுத்தம் தந்த வீட்டு உரிமையாளரிடம், பணம் இல்லை எனக் கூறி, அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்ய அனுமதித்த கொடூர கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியால் இந்த இழிவான செயலை அவர் செய்ததாகக் கூறப்படும் நிலையில், புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த மனசாட்சியற்ற கணவர் மற்றும் வீட்டு உரிமையாளரைக் கைது செய்துள்ளனர்.