தைவானில், மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்ததை நிரூபித்து நீதிமன்றத்திடமிருந்து இழப்பீடு பெற்ற கணவருக்கு, 5 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது
ரோபோட் வேக்யூம் கிளீனரில் உள்ள கேமராவைப் பயன்படுத்தி ரகசியமாகப் பதிவு செய்த காட்சிகளை அவர் ஆதாரமாகச் சமர்ப்பித்ததே அவருக்கு எதிராகத் திரும்பி, அவரே தண்டனை பெறும் நிலையை ஏற்படுத்தியது. தனது அனுமதியின்றி தனிப்பட்ட தருணங்களைப் பதிவு செய்ததாக மனைவி புகார் அளித்த நிலையில், கணவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.