சத்ரபதி சம்பாஜிநகர் கர்மத் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்த பூஜா (26) என்ற பெண்ணை அவரது கணவர் சத்யம் வாடிக்கையாளர்கள் கண்முன்னே கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். முதல் கணவரின் குழந்தைகளுக்காக பூஜா விவாகரத்து தர மறுத்ததே இக்கொடூர கொலைக்குக் காரணமாகும். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கணவரைக் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.