“எனக்கும் பல மடங்கு கூட்டம் வந்தது”.. வைகோ பேச்சு

0பார்த்தது
ஈரோட்டில் இன்று (பிப்.15) நடந்த மதிமுக நிகழ்ச்சியில் பேசிய பொதுச்செயலாளர் வைகோ, “இன்று ஒரு நடிகருக்கு வரும் கூட்டத்தைவிட பல மடங்கு கூட்டம் எனக்கு வந்தது" என கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “எங்கு சென்றாலும் பல ஆயிரக்கணக்கான பேர் கூடுவார்கள். பத்தாயிரம் வாகனங்கள் வந்தன. ஆனால், அந்த கூட்டம் எல்லாம், தோல்விக்குப் பிறகு சென்றுவிட்டார்கள். திமுக உடன் கூட்டணி வைத்ததில் இருந்து இதுவரை நமது கட்சியினர் திமுகவை விமர்சித்தது கிடையாது” என்றார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி