சென்னை: “அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்தேன்” என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு எனக் கூறும் ஜெயலட்சுமி கூறியுள்ளார். தாம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் என்ன முதல்வர் பதவி கேட்டா அதிமுக அலுவலகம் சென்றேன். எதற்காக எனக்கு விருப்பமனு கொடுத்தார்கள்?. எதற்காக நேர்காணலுக்கு வரக்கூறிலிட்டு துரத்தி விட்டார்கள்?. அம்மாவின் வாரிசு நான் தான், அதற்கான உயில் தேனியை சேர்ந்த ஒருவரிடம் உள்ளது. அந்த ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன்” என்றார்.