UPSC தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “UPSC 2025 தேர்வு முடிவில் இன்று வெளியாகியுள்ள நிலையில், நான் முதல்வன் திட்டப் பயனாளிகள் ராஜேஸ்வரி சுவே, ராஜா மொஹைதீன் ஆகியோர் அகில இந்திய அளவில் TOP 10 இடங்களில் தேர்வாகி பெருமைச் சேர்த்துள்ளனர். குறிப்பாக, தங்கை ராஜேஸ்வரி சுவே திராவிட மாடல் அரசு நடத்தும் UPSC தேர்வர்களுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி மையத்தில் தங்கி படித்தவர்” என்றார்.