சமூக வலைதளங்களில் தன்னை முன்னிலைப்படுத்திப் பரவி வரும் குழு நடன வீடியோ குறித்து கேரள முதல்வர் சதீசன் ஆச்சரியம் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் நடிகர் மோகன்லால் மற்றும் தனது நண்பரான முதல்வர் விஜயைவிடத் தாம் சிறப்பாக நடனமாடியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அது AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது என்றார். தொழில்நுட்ப வளர்ச்சிகள் வியக்க வைப்பதாகவும், இவற்றை அடிப்படைப் பாடத்திட்டங்களிலும் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.