டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், "யாராக இருந்தாலும் பேசும் போது பெண்களைக் கேலி செய்யக் கூடாது, கொச்சைப்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். உதயநிதியின் பேச்சு பெண்கள் வருந்தும் அளவிற்கு அமைந்துவிட்டது என்பதுதான் வருத்தத்திற்குரியது. உதயநிதி தனது பேச்சுக்கு வருந்துவார் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.