தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று (மார்ச்.4) தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களிடையே, தனது கைக்குழந்தையுடன் வந்திருந்த பெண் ரசிகை ஒருவர், "தனது மகளை விட தலைவர் விஜய்யை தான் அதிகம் பிடிக்கும்" என அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தைகளுடன் யாரும் வர வேண்டாம் என த் வெக அறிவுறுத்திய நிலையிலும், பலர் குழந்தைகளுடன் கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.